துபாய்:
10 மாதங்களாக கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் பிப்ரவரி 1ஆம் தேதி திறக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் கடந்த பத்து மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த தேவாயலம் திறக்கப்படுவதாக அந்த தேவாலய திருச்சபையின் பேராயர் லெனின் கன்னுலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயத்தை திறக்க துபாய் சமூக மேமபாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தேவாலயம் திறக்கப்படுகிறது. இதனால், பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6.30 மணி மற்றும் 7 மணி ஆகிய நேரங்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. கொரோனா கட்டுபாட்டு விதிகளின் படி, இந்த பிரார்த்தனையில் 60 வயதுக்குட்பட்டவர்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.