ஸ்ரீரங்கம்:   ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்க நாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். சொர்க்கவாச்ல திறப்பு நிகழ்வையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிச. 22ஆம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (டிச. 1) காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

இதையொட்டி தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏகாதசி பெருநாளில் சொர்க்கவாசல் எனப்படும்   பரமபத வாசல் திறப்பு  இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்க தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்.

சரியாக அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 4.48 மணிக்கு எம்பெருமான் சொர்க்க வாசல் வழியாக வருகை தந்ததார். அப்போது அங்கு குவிந்திரந்த ஏராளமான பக்தர்கள், ரெங்கா, ரெங்கா என பக்தியுடன் கோஷட்டனர்.   சொர்க்கவாசல் வைபவத்தையொட்டி பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்சி,

முன்னதாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு, அதிகாலை 4.48 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசலை கடந்த நம்பெருமாள்,  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வந்தடைந்தார். பின்பு  நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்கள் தரினசம் செய்தனர். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளினார்.

காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் (டிச. 3) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நேற்று இரவே கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.