சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், விண்வெளிப்பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) ஏப்ரல் 2025இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில்,  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில்,  விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாக, அங்குள்ள சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப்  திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் திட்டம் உதவும்  வகையில்,  இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைய உள்ளது.  இதற்கான பணிகள்  இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து, 2025ம் ஆண்டு ஏப்ரலில் பயன்பாட்டுக்கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மிழ்நாடு அரசின் டிட்கோ ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஏரோஸ்பேஸ் பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வடிவமைப்பு தொழில்களுக்கான மேம்பட்ட கணினி மற்றும் வடிவமைப்பு பொறியியல் மையத்தை (ACDEC) நிறுவுகிறது. இந்த ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதியாகும். இந்த பூங்கா மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால், மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது.

இங்கு, ஏவியோனிக்ஸ் வளாகம், சிறப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம் மற்றும் கிடங்கு வசதி ஆகியவற்றை ACDEC கொண்டிருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு TIDEL Park Ltd நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வடிவமைப்பு மற்றும் பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகளைக் கொண்டிருக்கும் என்று சமூக ஊடகங்களில் TIDCO தகவல் தெரிவிக்கிறது.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக ₹250 கோடி மதிப்பீட்டில் 5.54 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. டிட்கோ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, கட்டுமானப் பணிகள் ஜூன் 2022க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுதான் (2024) இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது  இந்த ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி என்று அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இதை அடுத்த ஆண்டு ஏப்ரலில் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.