ஸ்ரீநகர்:

டெல்லி நிஜாமுதின் மாநாட்டில் பங்கேற்ற ஸ்ரீநகர் மேயரின் பாதுகாவலர் கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஸ்ரீநகர் மேயர்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அவரின் பாதுகாவலர்  டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டதை மறைத்ததாகவும், இதையடுத்தே மேயர் Junaid Azim Mattu உள்பட அவரது பாதுகாவலர் மற்றும் 7 பேர்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகமெங்கும் பரவிருக்கும் தபிலிஜி (Tablighi) ஜம்மத் அமைப்பின்  தலை நகரமாக டெல்லி கருதப்படுகிறது. டெல்லியிலுள்ள நிஜாமுதீன் தர்காவிற்கு அருகிலுள்ள நான்கு மாடி கட்டிடமான பங்கிலே வாலி மஸ்ஜித்தில் மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து பதினைந்தாம் தேதிவரை மதக் கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்,  இஸ்லாமிய நாடுகள் மற்றும் இந்தோனேசியா மலேஷியா நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பலருக்கு, அதில் பங்குகொண்ட வெளிநாட்டைச்சேர்ந்தவர்களால் கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து, நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தாமாகவே முன்வ்ந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலர், தங்களது மொபைல் போனை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்  நிஜாமுதீன் மதபோதனை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீநகர் மேயரின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேயரின் பாதுகாவலர்  நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றதை மறைந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவருடன் சேர்ந்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.