டிக்டோல், காஷ்மீர்
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய போக்குவரத்து சாலைகளில் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையும் ஒன்றாகும். சுமார் 300 கிமீ தூரமுள்ள இந்த மலைச்சாலையில் தினமும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கமாகும்.
இன்று காலை காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள டிக்டோல் பகுதியில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலையில் இருந்து உருண்டு வந்த கற்களும் மண்ணும் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மலை போல் குவிந்து விட்டது,
அதை ஒட்டி பானி ஹால் மற்றும் உத்தம்பூர் வரையிலான சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இரு பக்கமும் வந்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் நடுவில் சிக்கிக் கொண்டுள்ளன. நிலச்சரிவை அகற்றும் பணி நடந்து வருகிறது.