கொழும்பு:
இலங்கை அம்பாறை கல்முனை சாய்ந்த மருது பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும், வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதன் பிறகு, சிறப்பு அதிரடிப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்பாறை கல்முனை சாய்ந்த மருது பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும், வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் அந்த வீட்டில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகள், துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சம்மாந்துறை பகுதியல் வெடி பொருட்கள், ஐஎஸ் அமைப்பின் கொடிகள், ஐஎஸ். உடைகள், லட்சத்துக்கும் மேற்பட்ட இரும்பு பந்துகள், தற்கொலை அங்கி, கேமிராக்கள் மீட்கப்பட்டதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.