கொழும்பு

லங்கை அரசு பல்ளி வேலை நாட்களை குறைத்துள்ளது.

ஜனவரி தொடங்கி அந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் வரை இலங்கையில் உள்ள பள்ளிகளில் ஒர் கல்வி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. அதாவது அங்குள்ள பள்ளிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

ஆயினும் கடந்த 2022-ம் ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி வேலைநாட்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டின் (2025) கல்வி வேலை நாட்களுக்கான அட்டவணையை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பள்ளி வேலை நாட்களை 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைத்துள்ளதாகவும்இந்த திருத்தப்பட்ட அட்டவணை, அங்குள்ள அனைத்து அரசு-தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கு பொருந்தும் எனவும் வருகிற 27-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.