டெல்லி

லங்கை அதிபர் இன்று பிரதம்ர் மோடியை சந்தித்து பேசி உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்று 9 ஆவது அதிபராக பதவியேற்றார்  இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

நேற்று மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அநுர குமாரவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமாரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

,இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.