சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த இலங்கை முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன், இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார்.
உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் க.வி.விக்னேஷ்வரன் கலந்து கொண்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், தமிழக பயணத்தின் ஒருபகுதியாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் க.வி.விக்னேஷ்வரன் இன்று சந்தித்து பேசினார்.
இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலை குறித்து ரஜினியிடம் அவர் பேசினார். அப்போது, ரஜினிகாந்த் இலங்கைக்கு விரைவில் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
[youtube-feed feed=1]