
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள அவரது மகாசமாதி முன் ஏராளமான தொண்டர்கள் திரண்னர். அவர்கள் அவரது சமாதியின் முன் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.
ஸ்ரீ சத்யசாய் பாபாவின், 92வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது மடம் அமைந்துள்ள புட்டபர்த்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பல ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இருந்து ஏராளமான சாய் பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர். அவர்கள், சாய்பாபாவின் சமாதிக்கு வந்து வணங்கி அவரது ஆசிகள் பெற்று செல்கின்றனர்.
மேலும் நாடு முழுவதும் உள்ள சாய்பாபா கோவில்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]