கொழும்பு:
இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜக்சே அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே பெயர் கொழும்பில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதுபோல கட்சியின் தலைவராக ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்..
ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்சேஅறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு என பல பகுதிகளிலும் வெடி வெடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.