
கொழும்பு:
இலங்கையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது.
கொழும்பு, புத்தளம், காலே ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]