கொழும்பு: சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிட இலங்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகளை போல் இல்லாமல், சீனாவின் தடுப்பூசிகள் 2ம் கட்ட சோதனை நிலையில் தான் இருக்கின்றன. ஆகையால் அந்த தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை இலங்கை கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் தடுப்பூசிகளுக்கு பதிலாக 1.35 கோடி ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனா். அதற்காக இந்தியாவிடமிருந்து 1 கோடி தடுப்பூசிகளும் பிரிட்டனிடமிருந்து 35 லட்சம் தடுப்பூசிகளும் வாங்கப்படுகின்றன. ஏற்கெனவே, 5 லட்சம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியது, குறிப்பிடத்தக்கது.