லங்கையில் நேற்று நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தலைநகர் கொழும்பு அருகே உள்ள கேரவலிபிதியா என்ற இடத்தில் உள்ள மின்சார நிலையத்தில் தொழில்நுட்ப காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று மதியம் வாக்கில் மின்சாரம் தடை பட்டது.
கொழும்பு நகரத்தில் சுமார் 7 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
7 மணி நேரத்துக்கு பிறகே கொழும்பில் மின்சார விநியோகம் சீரானது..
போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால், ஆங்காங்கே வாகனங்கள் தேங்கி பெரும் நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா காரணமாக ஏற்கனவே விமானநிலையம் மூடப்பட்டுள்ளதால், அங்கு பாதிப்பு இல்லை.
இதற்கு முன் இலங்கை முழுக்க கடந்த 2016 ஆம் ஆண்டு இது போல் நாடு முழுக்க 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கி இருந்தது.
கொழும்பு நகரில் 7 மணி நேரத்துக்கு பிறகு மின்சாரம் வந்தாலும், நாட்டின் எஞ்சிய பகுதிகளில் மின்சாரம் வரவில்லை.
-பா.பாரதி.