சிங்கப்பூர்:
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார்.
அங்கிருந்து மாலத் தீவுகளுக்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த விசா நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்குக்கு புறப்பட்டார்.
தற்போதைய நிலையில், கோத்தபய தாய்லாந்தில் மூன்று மாதங்கள் வரை தங்க முடியும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]