கொழும்பு:
இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார்.
இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
தலைநகர் கொழும்பு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடி, தொடர் மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாளிகை முன் ஏறத்தாழ 5,000 பேர் திரண்டனர்.
இதனையடுத்து கொழும்பு நகரில் நேற்று காலை வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் போராட்டங்கள் தொடர்ந்ததால், இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.