ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாசம் செய்து வருகின்றனர். இதனால், கடும் இன்னலுக்கு ஆளாகி வரும் தமிழக மீனவர்களுக்கு சமீப காலமாக இலங்கை நீதிமன்றம் கோடிக்கணக்கில் அபராதம் விதித்து வருகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினரின் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.