புது டெல்லி:
மிஷன் ஒலிம்பிக் குழுவில் பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், விளையாட்டு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) இன் முக்கிய உறுப்பினர்களாக முன்னாள் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளது.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், கடந்த ஒலிம்பிக் சுழற்சியில் பெற்ற அனுபவத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மிஷன் ஒலிம்பிக் செல்-லில் இடம் பெற்றுள்ளவர்களின் பட்டியல்:
பைச்சுங் பூட்டியா, அஞ்சு பாபி ஜார்ஜ், அஞ்சலி பகவத், த்ருப்தி முர்குண்டே, சர்தாரா சிங், வீரேன் ரஸ்குவின்ஹா, மாலவ் ஷ்ராஃப், மோனாலிசா மேத்தா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய வில்வித்தை சங்கம் மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு, நிர்வாக இயக்குனர் (டீம்ஸ்), SAI; இயக்குனர் (விளையாட்டு), MYAS; தலைமை நிர்வாக அதிகாரி, கன்வீனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி, இணை கன்வீனர், MOC-இன் தலைமை இயக்குனர் SAI, சந்தீப் பிரதான்.