டெல்லி: இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இளைஞர்களுக்கான கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வெல்பவர்கள் அரசு வேலைக்கு தகுதி பெறுவார்கள் என மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இந்த நிலையில், கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், திருத்தப்பட்ட அளவுகோலின்படி அரசு வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
சமீப காலமாக மத்திய மாநில அரசுகள் விளையாட்டுத்துறையை ஊக்குவித்து வருவதுடன், திறமையாக விளையாடி போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர் வீராங்கனைகளை கவுரவித்து வருகிறது. மேலும் அரசு பணிகளிலும் முன்னுரிமை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு வேலையில் எளிதாக பதவு உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் , “கேலோ இந்தியாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதக்கங்களை வெல்லும் அல்லது மூன்றாம் இடத்திற்கு வரும் வீரர்கள் மத்திய அரசு வேலைகளுக்கு தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். மேலும், அத்தகைய வீரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், விளையாட்டு வீரருக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதனப்டி, Khelo India Youth Games தவிர, Khelo India Winter Games, Khelo India Para Games மற்றும் Khelo India University Games ஆகியவற்றில் பதக்கம் வென்ற வீரர்கள் வேலைக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள் பணியாளர் பயிற்சி திணைக்களம் அறிவித்துள்ளது. இது தவிர, ஏதேனும் ஒரு விளையாட்டில் அவர்களது மாநிலம் அல்லது இந்திய நாட்டிற்காக விளையாடி இருந்தாலும் மத்திய அரசு பணிக்கு தகுதியானர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா போட்டிகள்:
கடந்த 2018ம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில், பிரதமர் நரேந்திர மோடியால் முதல் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.. கேலோ இந்தியாவின் அடிப்படை நோக்கம் இந்தியா முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் அடிமட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தளத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், Khelo India Youth Games (KIYG), Khelo India Winter Games (KIUG) போன்ற போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சார்பில் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றன. 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 21 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தவும், சக வீரர்களுடன் போட்டியிடவும், தேசிய அங்கீகாரத்தைப் பெறவும், பல துறைகளை உள்ளடக்கிய, Khelo India Youth Games ஒரு அடிப்படை தளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக சிறந்த 1,000 பங்கேற்பாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 5 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பல இளம் விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீபத்தில் கூட ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டில் நடந்தது, இதில், தமிழ்நாடு அணி பதக்க பட்டியல் அடிப்படையில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.