புதுடெல்லி:
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து நியூசிலாந்தை நோக்கி ஒரு வாரத்துக்கு முன்பு படகில் சென்ற 100 பேர் மாயமாகினர்.
இவர்கள் தமிழகம், புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த 100 இந்தியர்களுடன் நியூசிலாந்து நோக்கி மீன் படகு படகு ஒன்று,கொச்சி துறைமுகத்திலிருந்து சென்று கொண்டிருந்தது. இதில் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் இருந்தனர்.
இதில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, அதில் பயணம் செய்தவர்களின் 70 பைகள் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
20 ஆவணங்கள் மூலம் இறந்தவர்கள் விவரம் தெரியவந்துள்ளது.
பை முழுவதும் துணிகளும், பொருட்களும் இருப்பதை வைத்துப் பார்க்கும் போது, அவர்கள் தொலைதூர பயணம் மேற்கொண்டது உறுதியாகியுள்ளது.
கடலோர காவல் படையினரும், இந்தியாவின் மற்ற துறைகளும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடலில் படகு காணாமல் போன இடத்தை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இன்னும் 7 ஆயிரம் மைல் தொலைவு அவர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
காணாமல் போனவர்கள் மீட்கப்பட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ரபு தண்டபாணி என்பவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.