நியூடெல்லி: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் மல்யுத்த வீரர்களான பபிதா போகாட் மற்றும் யோகேஸ்வர்தத் முறையே சர்கி தாத்ரி மற்றும் பரோடாவில் தோல்வியை சந்தித்த அதே வேளையில், முன்னாள் ஹாக்கி கேப்டன் சந்தீப் சிங் பெஹோவாவில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த மூன்று விளையாட்டு வீரர்களும் பாஜகவால் களமிறக்கப்பட்டனர். சந்தீப் சிங், தன்னுடன் நெருக்கமாகப் போட்டியிட்ட, காங்கிரசைச் சேர்ந்த மந்தீப் சிங் சத்தாவை 5,314 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தாத்ரியில், கட்சியால் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னர் சுதந்திரமாக போட்டியிட்ட பாஜகவின் முன்னாள் விசுவாசியான சோம்பீர் சங்வான், பபிதா மற்றும் ஜேஜேபியின் சத்பால் சங்வானை தோற்கடித்தார்.
முந்தைய நாளில், தேர்தல் முடிவின் போக்குகள் தனது தோல்வியை முன்னறிவித்ததால், மக்கள் ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக பபிதா போகாட் கூறினார். “என்னை ஆதரித்த மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் மேலும் அவர்கள் எனக்கு அளித்த மரியாதைக்காகவும் நான் நன்றி கூறுகிறேன். பாஜகவின் உழைப்பை மக்கள் நம்புகிறார்கள், அதனால்தான் அவர்கள், அக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்” என்றார்.
அதே சமயம், தாத்ரியில் பபிதா வெளியாளாகக் கருதப்பட்டதும் தோல்விக்கு ஒரு காரணமாகும்.
பரோடாவில், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத், காங்கிரஸ் கட்சியின் கிரிஷன் ஹூடாவிடம் கிட்டத்தட்ட 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். “தேசியவாதம் மற்றும் அறுவை சிகிச்சை முறை இராணுவத் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்த பாஜகவின் கவனம் தன்னை காவி கட்சியில் சேர ஈர்த்தது, என்றார். மேலும், இக்கட்சி எப்போதும் தேசத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்திருக்கிறது“, என்றும் தத் கூறியிருந்தார்.