லண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன.
மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் இங்கிலாந்தில் ஏலத்துக்கு வந்துள்ளன. 10,000 பவுண்டுகள் முதல் 15,000 பவுண்டுகள் வரை கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹன்ஹாமில் உள்ள கிழக்கு பிரிஸ்டல் ஏல மையமானது, தபால் பெட்டியில் கவரில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன, அதன் பின்னால் ஒரு வரலாறு இருப்பதாக கூறி இருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய கண்டுபிடிப்பு. விற்பனையாளர் அதை சுவாரஸ்யமானதாக கருதினார், ஆனால் எந்த மதிப்பும் இல்லை என்பதால் அவற்றை அப்புறப்படுத்தச் சொன்னேன் என்று கிழக்கு பிரிஸ்டல் ஏலத்தின் ஏலதாரர் ஆண்டி ஸ்டோவ் கூறினார்.
ஏற்கனவே 6,000 பவுண்டுகளுக்கு ஆன்லைன் விற்பனையை ஈர்த்துள்ள இந்த கண்ணாடிகள், இங்கிலாந்தில் பெயரிடப்படாத ஒரு விற்பனையாளரின் குடும்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1910 மற்றும் 1930 க்கு இடையில் தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலிய துறையில் இருந்த போது, தமது மாமா தனக்கு அளித்த பரிசு இந்த கண்ணாடி என்று அவர் கூறி உள்ளார்.
விற்பனையாளரின் மாமா நிச்சயமாக தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்காக பணிபுரிந்தார், மேலும் காந்தி 1910ம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை 1920ம் ஆண்டுகளின் முற்பகுதி வரை கண்ணாடி அணியவில்லை என்று நம்புகிறேன் என்று ஸ்டோவ் கூறி உள்ளார். ஆகஸ்ட் 21ம் தேதி கிழக்கு பிரிஸ்டோலில் இருந்து காந்தியின் மூக்குக் கண்ணாடி இணையம் மூலம் விற்பனைக்கு வருகிறது.