சென்னை

பிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

”சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.10 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

* வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும்.

* சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.