டெல்லி:
கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே  வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தற்போது, டெல்லி, மும்பை, ஹவுரா, அகமதாபாத் இடையே தினசரி இயங்கப்படும் சிறப்பு ரயில்கள் இனிமேல்  வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சமடைந்துள்ளது. உலக அளவில் 3வது இடத்துக்கு வந்துள்ளது.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தாக்கம் காரணமாக, பல மாநிலங்கள் விமானம் மற்றும் ரயில்சேவைகளை மேலும் நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளன. வெளி மாநலிங்களில் இருந்து வருவோர் காரணமாகவே தொற்று அதிகம் பரவுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதையடுத்து, ஏற்கனவே  டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் பயணிகள் விமானங்கள்  திங்கள்கிழமை முதல் ஜூலை 19 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியில் தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதையடுத்து,  ஹவுரா, டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே தினசரி இயங்கப்படும் சிறப்பு ரயில்களை வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாட்னா வழியாக செல்லும் 02303/02304ஹவுரா – புது டெல்லி – ஹவுரா சிறப்பு ரயில் மற்றும் தன்பாத் வழியாக செல்லும் 02381/02382 ஹவுரா – புது டெல்லி – ஹவுரா சிறப்பு ரயிலும் ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒரு முறை இயங்கும் என்று கிழக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த இரண்டு ரயில்களும் ஹவுராவிலிருந்து ஜூலை 10 முதலும், புடெல்லியிலிருந்து ஜூலை 11 முதலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.