டில்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 270 மற்றும் 35ஏ நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இன்று பாராளு மன்றத்தின் இரு அவைகளிலும் அறிவித்தார்.

இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இரு அவைகளும் அமளிதுமளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு அதிமுக, ஆம்ஆத்மி கட்சி, பிஜூ ஜனதாதளம் , பகுஜன் சமாஜ், தெலுங்குதேசம்  போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

தற்போது, அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் அதை, சீர்குலைக்க  பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பபட்டு, யாத்ரீகர்கள் அனைவரும் திருப்பி அழைக்கப்பட்டனர். அதையடுத்து, ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையதள இணைப்பு மற்றும் சமூக சேவை இணையதளங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதுபோல, பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதன் பின்னர் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமித் ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307 நீக்கப்படுகிறது. ஜம்மு – காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூடிய  யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரெதேசமாக லடாக்கும் இருக்கும் என அறிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், ஜம்மு – காஷ்மீர் தொடர்பாக நாடாளு மன்றத்தில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் அதிமுக ஆதரவு தரும் என்றவர்,  சட்டப்பிரிவு 370ஐ காஷ்மீருக்கு தற்காலிகமாகவே கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டபிரிவு 370ஐ நீக்குவதன் மூலம் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய, ஆத்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். இது மாநிலத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் தரும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

370 வது பிரிவை ரத்து செய்ய முற்படுவதால் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசை ஆதரிக்கிறது. ஜே & கே மக்களின் அமைதி மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.

இந்த கட்சிகள் மட்டுமின்றி பிஜு ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி  உள்பட சில பாஜக கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் கெஜ்ரிவால், மாயாவதி போன்றோர் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.