
பவுர்ணமி அம்மாவாசை என்றாலே மாதம் மாதாம் வரக்கூடிய ஒன்றுதான். இருந்தாலும் ஒவ்வொருமாதமும் ஒரு சிறப்பு உண்டு. அதுபோலவே வைகாசி மாத பவுர்ணமி அன்று முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள் ஆகும். அதுபோன்றே வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் இருந்துவந்தால் இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.
பவுர்ணமி விரதம் இருப்பதற்கு வைகாசி மாதமே சிறந்த மாதமாகும். விரதமிருப்பவர்கள் வைகாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து எடுப்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றியடைவார்கள்.
வைகாசி பவுர்ணமி நாள் அன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை உச்சரித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுகின்றனர். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் தெய்வசக்தி கிடைக்கப் பெறுவார்கள்.
இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்துவந்தால் நீங்கள் எண்ணிய காரியம் நடக்கும்.
விரதம் இருப்பவர்கள் இரவில் பால், பழம், இட்லி இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளும் உணவுகள் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கு ஏற்றதாகவும் இரவு பூஜை நேரத்தில் ஏதுவாகவும் இருக்கும்.
பவுர்ணமி பூஜை செய்து உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறுவீர்கள்.
[youtube-feed feed=1]