இன்று  (2-4-2020 ) ராமநவமி: வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்…

ஸ்ரீ ராமநவமி அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் குறித்த பதிவு

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.

சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும்.

தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார்.

ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்குப் பல அரிய வாழ்க்கை முறைகளைப் போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

வழிபடும் முறை: 

ஸ்ரீ ராமநவமி இந்நாளில், ராமர் படத்தைப் பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம்,  வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீ ராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

பலன்:

ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.