
பெங்களூரு:
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த விவகாரத்தில் இன்னொரு அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சசிகாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா உள்ளிட்ட பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ஆர்.அனிதா என்பவர் சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel