டெல்லி:
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்ல்லை என்ற உச்சநீதிமன்றத் தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் தேர்வை எழுத முடியாத மாணாக்கர்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பல்கலைக்கங்களில், இடைப்பட்ட ஆண்டுகளின் செமஸ்டர்கள் தேர்வு செய்யப்படவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது.
யுஜிசியின் அறிவிப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். வழக்கின் கடந்த விசாரணையின்போது, யு.ஜி.சி பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது
அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து எந்தவித திட்டமும் இல்லை, இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால், அது மாணவர்களின் எதிர்காலத்தில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான விவாதத்தின்போது, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களின் “யுஜி / பிஜி மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும், ஆனால், இறுதி ஆண்டு / டெர்மினல் செமஸ்டர் தேர்வுக்கு ஆஜராகாமல் பட்டங்களை வழங்குவது சரியல்ல என்றும்,
பல்கலைக்கழக இறுதித்தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.