மும்பை
மும்பை நகர மின்சார ரயில்களில் முதியவர்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதிக்கு மின்சார ரயில் மிகவும் அத்தியவசியமாக உள்ளது, குறிப்பாக மும்பையில் மின்சார ரயில் சேவை நகரின் உயிர் நாடியாக உள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் 75 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே மின்சார ரெயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலாகவே இருப்பது வழக்கமாகும், இதையொட்டி மின்சார ரெயில்களில் 3, 12-வது பெட்டிகளில் முதியவர்களுக்கு என 14 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயினும் கூட்ட நெரிசல் காரணமாக முதியவர்கள் அவர்களுக்கான இருக்கைகளில் சென்று உட்காருவதில் சிக்கல் உள்ளது.
இதனால் மத்திய ரெயில்வே மின்சார ரெயிலில் முதியவர்களுக்கு என தனிப்பெட்டியை அறிமுகம் செய்து உள்ளது.
மத்திய ரெயில்வே இது குறித்து,
”மின்சார ரெயிலின் மையப்பகுதியில் உள்ள லக்கேஜ் பெட்டி, முதியவர்களுக்கான பெட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் முதியவர்கள் எளிதில் மின்சார ரெயிலில் ஏறி, இறங்க முடியும். முதியவர்களுக்கான பெட்டியில் 13 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல அனைத்து மின்சார ரெயில்களிலும் முதியவர்களுக்கு தனிப்பெட்டி அமைக்கப்படும்.”
என அறிவித்துள்ளது.
மும்பை, மின்சார ரயில், முதியவர்கள். தனிப்பெட்டி , Mumbai, Electric train, Aged people,
[youtube-feed feed=1]