டெல்லி:
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, ராபர்ட் வதேரா சார்பில், டில்லியில் உள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து, ராபர்ட் வதேரா மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோராவுக்கும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ரூ.5 லட்சம் பிணைத்தொகை செலுத்தி 2 பேரும் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Patrikai.com official YouTube Channel