கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் பரவிவருதாக வந்த செய்தியை அடுத்து, வேலூர் மாவட்ட எல்லையில் 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தாக்குதலால் கோழிகள் இறப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டம் சேர்காடு வழியாக தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில கால்நடைத்துறை அதிகாரிகளின் சான்றிதழ்கள் பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், அங்கிருந்து வரும் கோழி, கோழி தீவனம், முட்டை, உள்ளிட்டவற்றின் மீது பறவைக்காய்ச்சல் தடுப்பு மருத்துகள் அடிக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சோதனை சாவடிகளிலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.