somu tvs copy
ஜி,கே. வாசன், “ம.ந.கூட்டணியோட நாங்க வச்சிக்கிட்டது கூட்டணி இல்லே.. தொகுதி உடன்பாடுதான்” அப்படின்னு சொல்றாரு. ஆனா தேர்தல் நேரத்தில “ஆறு கட்சி கூட்டணி.. அசைக்க முடியாத கூட்டணி” அப்படின்னுதானே இவங்க பிரச்சாரம் பண்ணாங்க?  கூட்டணியா இருந்தது எப்போ தொகுதி உடன்பாடா மாறுச்சு?  இதை ஜி.கே. வாசன் விளக்க வேண்டாமா?

"ஹலோ.. உங்க கேள்வி சரியா கேட்கலை... ஹலோ.."
“ஹலோ.. உங்க கேள்வி சரியா கேட்கலை… ஹலோ..”

 
இன்னொரு பக்கம் தே.மு.தி.க.வும் ஒதுங்கிடுச்சு.    தருமபுரியில நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில கலந்துக்க வந்த  தே.மு.தி.க. மாநில பொருளாளர் இளங்கோவன், “தமிழக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனிச்சி  போட்டியிடும். தே.மு.தி.க.வோட  தலைமையை ஏற்று கூட்டணி அமைக்க கட்சிங்க வந்தா ஏத்துக்குவோம்”னு பேசியிருக்காரு.
ஏற்கெனவே தே.மு.தி.க.வோட தலைமைய ஏத்துக்கிட்டுத்தானே ம.ந.கூட்டணி கட்சிங்க வந்துச்சு. அவங்க, விஜயகாந்தைத்தானே முதல்வர் வேட்பாளர்னு அறிவிச்சாங்க. அதுவும் ம.ந.கூட்டணியோட ஒருங்கிணைப்பாளர் வைகோ மூச்சுக்கு முன்னூறு தடவை, “கேப்டன் கூட்டணி, கேப்டன் கூட்டணி”னு கூவினாரே!
ஆக, தே.மு.தி.க.வோட தலைமைய ஏத்துக்கிட்ட ம.ந. கூட்டணியவிட்டு ஏன் பிரியணும்?
"ரொம்ப கேள்வி கேட்டீனா அப்படியே புடிச்சி தள்ளிப்புடுவேன்..!"
“ரொம்ப கேள்வி கேட்டீனா அப்படியே புடிச்சி தள்ளிப்புடுவேன்..!”

“நாங்க ஆட்சிக்கு வந்தா வெளிப்பபடையான நிர்வாகம் நடக்கும்”னு பேசினாங்களே… இப்போ கூட்டணிய முறிச்சிக்கிட்டதுக்கான காரணத்தைக்கூட வெளிப்படையா சொல்லாதது ஏன்?

  • ரவுண்ட்ஸ்பாய்