சென்னை:

தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும்  டி.டி.வி. தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி  ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் சபாநாயகரிடம் அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன் புகார் அளித்தார். இதற்கு ஆதாரமாக 3 பேரும் தேர்தலின்போது தினகரன் கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

இதையடுத்து,   3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க முடிவு செய்த  சபாநாயகர் தனபால் சட்ட விதிகளின்படி  3 எம்.எல்.ஏ.க்களும் என்னென்ன விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை சுட்டிக் காட்டி, 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு குறிப்பிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இக்கடிதம் கண்ட ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும். இல்லை என்றால் கட்சி தாவல் விதிப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று  எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த நோட்டீசை 3 எம்.எல்.ஏ.க்களுக்கும்  ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.