டெல்லி; மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பலர் மரியாதை செய்தனர்.
இதற்கிடையில் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள வீர்பூமியில் உள்ள அவரத நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் புதன்கிழமை காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவும் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இருக்கும் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர்தூவி இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இதற்கிடையில், தந்தையின் நினைவை போற்றும் வகையில் தனயனான ராகுல்காந்தி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது. அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தில்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பிகாரில் வாக்குரிமைப் பேரணியில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தியால், இந்த நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்க முடியவில்லை.