சென்னை:  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது? என்பது குறித்து  இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இன்று மாலை 6.30 மணி அளவில் தலைமைச்செயலகத்தில் செய்தியளார்களை சந்திக்கிறார். அப்போது,  தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. முன்னதாக, கடந்த 5-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில்,  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது,. மேலும், நிதிநிலை குறித்த  வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, நிதிநிலை அறிக்கை இறுதி வடிவம் பெறும் நடவடிக்கைகளை தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று மாலை 6.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்போது,  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கலாகிறது? பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.