வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ‘ஸ்பார்க்’ இன்று வெளியானது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெட்ன் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், மீனாக்‌ஷி செளதரி, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது தி கோட் படத்தின் மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடல் வெளியாகியுள்ளது. கங்கை அமரன் இப்பாடலை எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, வ்ருஷா பாலு இப்பாடலை பாடியுள்ளார்கள்.