மாட்ரிட் :

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள சென்ட்ரோ டி சலூத் ரமோன் ஒய் காஜல் எனும் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துவர சென்று வரும் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பணமில்லாமல் இலவசமாக அழைத்துவருகிறார்.

இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த ஓட்டுனரை கௌரவிக்க நோயாளி ஒருவர் இருக்கிறார் அவரை அழைத்துச்செல்ல வாருங்கள் என்று வரவழைத்து, அவர் வந்ததும்.

அவருக்கு உற்ச்சாக கரவொலியெழுப்பி, அவரது சேவையை பாராட்டும் விதமாக பணம் வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த டாக்ஸி ஓட்டுநர், கண்ணீர் விட்டது அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது.