ஸ்பெயின்:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

இவர்தான், கொரோனா வைரஸால் இறந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த உலகின் முதல்பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஸ்பெயினையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், 12 ஆயிரத்து 285 பேர் அந்த நோயில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை, ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ ஆறாம் உறவினரும், அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி போர்பன், டியூக் ஆஃப் அரான்ஜுவேஸ் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.