இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மைல்டு மைல்டு கொரோனா தான் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார்.
எம்.ஜி.எம் மருத்துவமனையில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர் . அணைத்து பிரபலங்களும் , சமூக ஊடகத்தினரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வந்தனர் .
இந்நிலையில் தற்போது எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.