டெல்லி: தென்மேற்கு பருவமழை அடுத்த 24மணி நேரத்திற்குள்   தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 28வரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடரும் நிலையில், இந்த ஆண்டு வெயிலை புறந்தள்ளிவிட்டு அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை,  நடப்பாண்டு,  மே 27 ஆம் தேதிக்கு முன்னதாகவே தொடங்கும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்தசில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கணித்துள்ளது. இது தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பரவி, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் ஆரம்ப தொடக்கத்தைக் குறிக்கிறது.

தற்போது அரபிக் கடலில் உருவாகி உள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு திசை நோக்கி நகர்கிறது.  மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான,  ரத்தினகிரிக்கும் டாபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரைய கடக்க வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்  இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதன்மை மழைப்பொழிவு பருவம் வடகிழக்கு பருவமழையாக (அக்டோபர்-டிசம்பர்) இருந்தாலும், இந்த ஆண்டு வலுவான மற்றும் ஆரம்பகால தென்மேற்கு பருவமழை மேற்குப் பகுதிகளுக்கு மிகவும் தேவையான நீர்ப்பாசனத்தைக் கொண்டு வந்து ஆரம்பகால விவசாயத்தை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.