சென்னை

யில்களில் கூடுதல் லக்கேட் எடுத்துச் செல்ல தெற்கு ரயில்வே கட்டணம் விதித்துள்ளது,

தெற்கு ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏ.சி. 2-ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3-ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.