சேலம்

தெற்கு ரயில்வே இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக  மாற்றம் செய்துள்ளது

தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெ=யில் கோவை செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும்

அதாவதுஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-13352) நாளை(செவ்வாய்க்கிழமை) வருகிற 30-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில்) கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் மதியம் 12.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். அங்கிருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர். பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12678) வருகிற 30-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய கிழமைகளில்) கோவை ஜங்ஷன் செல்லாமல் போத்தனூர், இருகூர் வழியாக செல்லும். இந்த ரயில் மதியம் 12.47 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும்”

என்று தெரிவிக்கபட்டுள்ளது.