டில்லி
கேரளாவில் வரும் 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. புயல் சின்னம் ஒன்று அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ளது.
அது தவிர காற்றின் சுழற்சியிலும் மாறுபாடு உள்ளாகி இருக்கிறது.
இதனால் தற்போது பெய்யும் மழை மேலும் நீடிக்கும்.
கேரளாவில் வரும் 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது”
என கூறப்பட்டுள்ளது.