சியோல்: தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்கொரியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் 3-ம் தேதி நடைபெற உற்ற நிலையில், தற்காலிக அதிபராக இருந்துவந்த டக் சூ தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (வயது 70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ,இதையடுத்து, தற்காலிக அதிபர் அதிபர் ஹான் டக் சூ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்போதைய. துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வளர்ந்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், தாராளவாத முன்னணி வேட்பாளர் லீ ஜே-மியுங்கிற்கு ஒரு பழமைவாத சவாலுக்கு இந்த நடவடிக்கை களம் அமைக்கிறது. “எனக்கு முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் கனமான பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு கனமான பொறுப்பை ஏற்றுக்கொள்வது,” என்று ஹான் கூறினார்.
“நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததையும், எனக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்கும் எனது பதவியை விட்டுக்கொடுக்க நான் இறுதியாகத் தீர்மானித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
75 வயதான ஹான் இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கொரியாவின் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார்.