சியோல்: தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவங்கிவிட்டதால், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. அதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.
தென்கொரியாவில் அத்தியாவசிய அங்காடிகள் தவிர பார்கள், கிளப்புகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. ஆண்டின் இறுதியில் நடைபெறும் கொண்டாட்டங்களையும் இசை நிகழ்ச்சிகளையும் 2ம் அலை காரணமாக தென்கொரிய அரசு நிறுத்தி உத்தரவிட்டு உள்ளது.
அந்நாட்டில் இன்று புதிதாக 450 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 3 நாட்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.