தென் கொரிய ராணுவம் மற்றும் விமானப் படை இனைந்து இன்று காலை மேற்கொண்ட ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததால் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தின் கூட்டுப் பயிற்சி மார்ச் 4 முதல் மார்ச் 20 வரை நடைபெறும் அதேவேளையில் தென் கொரிய ராணுவம் இந்த பயிற்சியில் தனியாக ஈடுபட்டுள்ளது.

வட கொரிய எல்லைக்கு அருகிலுள்ள போச்சியோனில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் போர் பயிற்சியில் ஈடுபட்டது.

KF-16 ரக போர் விமானங்களில் இருந்து வீசப்பட்ட MK-82 குண்டுகள் தவறுதலாக நியமிக்கப்பட்ட எல்லையை தாண்டி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், 5 பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு பேர் படுகாயமடைந்த போதிலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வீச்சால் அந்தப் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விமானப் படை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்ததற்கு இழப்பீடு வழங்க ராணுவம் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.