விமான பொறியாளர் ஒருவர் போலி லைசென்ஸ் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வந்தது தற்போது தெரிய வந்ததுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
விமான பொறியாளராக இருந்தவர் வில்லியம் சான்ட்லெர். இவருக்கு விமானம் குறித்த தகவல்கள் தெரியும் நிலையில், தென்னாப்பிரிக்க ஏர்வேசில் போலியாக லைசன்ஸ் பெற்று விமலானத்தை இயக்கி உள்ளார். இதையடுத்து விமானியாக பணியில் சேர்ந்த சான்ட்லெர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விமானத்தை இயக்கி வந்துள்ளார்.
இவரது விமானம் கடந்த ஆண்டு இறுதியில், ஆல்ப்ஸ் மலையின் மேல் செல்லும் போது, அவர் விமானத்தை இயக்கிய விதங்கள் குறித்து சர்ச்சை எழுந்தது. அதைத்தொடர்ந்து, அவரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்த விமான நிறுவனம், அவரிடம் துறை ரீதியிலான விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின்போது சான்ட்லெர் வைத்திருந்தது போலி லைசன்ஸ் என்ற விவரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்ட சான்ட்டெர்ஸ் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.