ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்கா அரசானது 5.25 டாலரை செலுத்துகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணியை கடந்த வாரம் இந்தியா தொடங்கியது. பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானிய உதவியாக ஏற்கனவே தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்  தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இந்தியாவின் இருந்து சீரம் நிறுவனத்தின் 1.5 மில்லியன் கொரோனா மருந்துகள் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதற்காக ஒரு டோஸ்க்கு தென்னாப்பிரிக்கா அரசானதுஅ 5.25 டாலரை இந்தியாவுக்கு செலுத்துகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மற்ற நாடுகள் செலுத்தும் 3 டாலரை விட தென்னாப்பிரிக்கா அதிகம் செலுத்துகிறது. இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெனரல் அன்பன் பிள்ளை கூறியதாவது:

தென்னாப்பிரிக்காவிற்கான சீரம் தடுப்பூசி விலையானது, உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற நாட்டின் நிலையை அடிப்படையாக கொண்டது. அதிக அளவுகளை வாங்கினால் தென்னாப்பிரிக்க அரசாங்கம் வாங்கினால், அந்நாட்டுடன் குறைந்த விலைக்கு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்போம் என்றார்.

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் தென்னாப்பிரிக்காவின் முன்னணி சுகாதார ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 2வது அலை தாக்கத்தின் போது அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.