கேப்டவுன்: இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்து, 217 ரன்கள் பின்தங்கியது.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது. தற்போதைய நிலையில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 40 ரன்களை எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் டி காக் மட்டுமே 76 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டினார். அதற்கடுத்து பந்துவீச்சாளர் பிரிடோரியஸ் எடுத்த 37 ரன்கள்தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள்.
துவக்க வீரர் டீன் எல்கர் 26 ரன்களை எடுத்தார். கேப்டன் டூ பிளசிஸ் 3 ரன்கள் மட்டுமே எடுக்க, வான் டூஸன் டக் அவுட்டானார்.
இங்கிலாந்து தரப்பில் ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது.
இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தற்போதைய நிலையில், இங்கிலாந்து அணி 260 ரன்களுக்கும் மேலாக முன்னிலை பெற்றுள்ளது.